லாஸ்லியாவின் "ஜென்டில்வுமன்" டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

10 hours ago 2

சென்னை,

அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன்' திரைப்படம் உருவாகியுள்ளது. கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணனுடன் லாஸ்லியாவும் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.. ஜெய்பீம் படத்தில் அசத்திய லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெட்ராஸ், காலா, நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஹரிகிருஷ்ணன் இதில் நடித்துள்ளார்.

ஜென்டில்வுமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் "ஆண்களுக்கு மட்டும்தான் ஜென்டில் என்று சொல்ல வேண்டுமா? வலிமை, பொலிவினை புது அர்த்தம் தெரிவிக்க ஜெண்டில்வுமன் வந்திருக்கிறாள்" என படக்குழு குறிப்பிட்டிருந்தது.

"ஜென்டில்வுமன்" படம் மார்ச் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் "ஜென்டில்வுமன்" திரைப்படத்தின் டீசர் வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

The wait is almost over! Brace yourself for a powerful glimpse into #GentlewomanMovie! Teaser drops on Feb 12 at 5 PM! Stay tuned! ⏳Hitting the screens on March 7th #WomensDay#GentleWomanfromMarch7th@Dir_Joshua @khpictures6 @odo_pics @udhayramakrish2 @teamaimpr pic.twitter.com/X2ZCdu2h2X

— KOMALA HARI PICTURES (@khpictures6) February 10, 2025
Read Entire Article