“அதையுமா வீடியோ எடுத்து வைப்ப..? தொக்கா சிக்கிய மன்சூர் மகன்.. நீதிமன்ற வாசலில் பொங்கியது ஏன் ? மன்சூர் செல்போனில் நடிகைகள் நம்பர் இருக்காம்..!

4 months ago 10
நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், போதை பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு அவரது செல்போனில் இருந்த வீடியோவே முக்கிய காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது போதை பொருட்களை கடத்தி விற்றதாக நடிகர் மன்சூரலிகானின் மகனும் கடமான் என்ற படத்தின் நாயகனுமான அலிகான் துக்ளக் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இந்த வழக்கில் கல்லூரிமாணவர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மெத்தபெட்டமைன், ஓஜி கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை பயன் படுத்தியதோடு, அவற்றை கடத்தி பலருக்கு விற்று வந்ததாக அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 பேரை ஜெ.ஜெ நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்த நிலையில், அங்கு காத்திருந்த நடிகர் மன்சூர் அலிகான் வளாகத்தில் டீ வாங்கி குடித்து விட்டு புலம்பியபடியே சுற்றிக் கொண்டிருந்தார் எப்படியும் தனது மகனுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்று காத்திருந்த நிலையில் மகனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டார் மன்சூர் அலிகான். போதைப்பொருள் பயன்படுத்தும் நபரின் செல்போனில் தனது மகனின் நம்பர் இருந்ததால் போலீசார் கைது செய்து விட்டதாகவும், தனது செல்போனில் நடிகைகள் நம்பர் இருக்கு அப்படி என்றால் தன்னை கைது செய்து விடுவார்களா ? என்று விதண்டாவாதமாக கேள்வி எழுப்பினார் மன்சூர் தனது மகனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது என்பதே தனக்கு தெரியாது என்ற மன்சூர் அலிகான், தனக்கான நேரம் வரும்போது பார்த்துக் கொள்வதாகக் கூறிச்சென்றார் இதற்கிடையே அலிகான் துக்ளக் பயன்படுத்திய செல்போனில் அவர் மெத் என்னும் போதைப்பொருளை மூக்கில் வைத்து உறிஞ்சும் வீடியோக்கள் இருந்ததாகவும், அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதை வீடியோவாக எடுத்து தனது செல்போனில் சேமித்து வைத்திருந்ததாகவும், அதனையே ஆதாரமாக கொண்டு அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர், மேலும் அலிகான் துக்ளக் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும், பார்ட்டிகளில் பங்கேற்போருக்கும் மெத் என்னும் போதைப்பொருளை சப்ளை செய்தது அவரது ஆன்லைன் வங்கி பணப்பரிவர்த்தனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அம்பத்தூர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி மன்சூர் அலிகானின் மகன் உள்ளிட்ட 7 பேரும் 15 நாட்கள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Read Entire Article