தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருந்தாலும் இப்போதே தமிழக அரசியல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. புதிய கூட்டணிகள் உருவாகும் சாத்தியங்கள் தெரிகின்றன. பழைய கூட்டணியை புதுப்பிக்கும் நகர்வுகளும் நடக்கின்றன. வரவிருக்கும் மாநிலங்களவைக்கான தேர்தலை முன்னிறுத்தி யும் கூட்டணி அச்சாரங்கள் போடப்படுகின்றன.
“பாஜக-வுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை” என்று சொல்லிக் கொண்டிருந்த அதிமுக-வும் தங்களுக்கு திமுக தான் ஒரே எதிரி என தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செ.செம்மலையிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். இனி அவரது பேட்டி...