அதிமுகவுடன் பாஜக கூட்டணியா? உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு தகவல்

1 month ago 6

புதுடெல்லி,

டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமித்ஷா கூறியதாவது: தென்னிந்தியாவில் மிகவும் முற்போக்கான மாநிலமாகக் கருதப்பட்ட தமிழ்நாடு, தற்போது திமுக அரசின் கொள்கையால் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளது.தாய்மொழியில் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் தேசிய கல்விக்கொள்கையையும், மருத்துவம், பொறியல் உள்ளிட்ட படிப்புகளை தமிழ்மொழியில் கற்பிப்பது குறித்தும் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால், அவர்கள் அதை தொடங்கவும் இல்லை . தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் யாருக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது. .அதற்கு, 0.0001 சதவீதம் கூட அநீதி நடக்க வாய்ப்பு இல்லை . அதிமுகவுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைப்பெற்று   வருகிறது. சரியான நேரம் வரும்போது, அதை தெரியபடுத்துவோம்" என்றார்.

Read Entire Article