கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ. நேற்று அளித்த பேட்டி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நான் உள்பட எம்பிக்கள் சந்தித்தது, கூட்டணிக்காக என்பது உண்மையான தகவல் இல்லை. இதில் அரசியல் இல்லை. திமுகவை எதிர்த்து களம் ஆட யார் வந்தாலும், ஏற்க தயார். எங்களுடன் யார் இணக்கமாக செயல்பட்டாலும், செயல்பட தயார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவதும், ஒரு தொண்டனாக இருந்து கூட பணியாற்றுவேன் என அண்ணாமலை பேசுவதும் அவரவர் கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.
4 சுவர்களுக்குள் விஜய் 2 ஆண்டுகால அரசியல்
கே.பி.முனுசாமி கூறுகையில், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையேதான் போட்டி என, விஜய் அவருடைய கருத்தை கூறியுள்ளார். அரசியல் ரீதியாக அவர் பேச வேண்டும். சினிமா அனுபவம் மிகுந்தவர் விஜய். விஜய் மக்களை சந்திக்காமல் 4 சுவர்களுக்குள்ளேயே, 2 ஆண்டு கால அரசியலை முடித்து விட்டார். ஆதவ் அர்ஜூனா எங்கு சென்றாலும், குழப்பத்தை விளைவிக்கும் நபராக இருக்கிறார் என்றார்.
The post அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என அமைச்சர் அமித்ஷா கூறுவது அவரது கருத்து: கே.பி.முனுசாமி சொல்கிறார் appeared first on Dinakaran.