அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிப்போம்: முன்னாள் முப்படை வீரர்கள் தீர்மானம்

1 day ago 2


கண்ணமங்கலம்: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எந்த ெதாகுதியில் நின்றாலும் தோற்கடிப்போம் என கண்ணமங்கலத்தில் நடந்த முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகளை கொன்ற தீவிரவாதிகளுக்கு `ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. இதுதொடர்பாக அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்திய ராணுவ வீரர்கள் குறித்து முரணான கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் சங்க தலைவர் லோகநாதன் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றி மூலம் உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த முப்படை வீரர்களுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கிறோம். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சிந்தூர்வெற்றி விழா பேரணி நடத்தப்படும். ராணுவத்தை பற்றி தரக்குறைவாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை வன்மையாக கண்டிக்கிறோம்.

அவர் வரும் தேர்தலில் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை தோற்கடிப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிப்போம்: முன்னாள் முப்படை வீரர்கள் தீர்மானம் appeared first on Dinakaran.

Read Entire Article