அதிமுக மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கார் மோதி மூதாட்டி, வாலிபர் காயம்

3 months ago 20

நாகப்பட்டினம்: அதிமுக முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதி எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியன், நாகை மாவட்டம், கீழ்வேளூரில் நேற்று நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க காரில் சென்றார். காரை தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த அருண்(30) ஓட்டி வந்தார். வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் கார் வந்தபோது, டூவீலரில் வந்த அன்பழகன் (38), திடீரென சாலையை கடக்க முயன்றார். உடனே டிரைவர் அருண், டூவீலர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பினார்.

அப்பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள பெரியாச்சி அம்மன் கோயில் சுவர் மீது மோதி நின்றது. இதில் அங்கு நின்ற பாப்பா (60) என்ற மூதாட்டியும், டூவீலரில் வந்த அன்பழகனும் காயம் அடைந்து, நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் ஓட்டுநர் அருண் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post அதிமுக மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கார் மோதி மூதாட்டி, வாலிபர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article