பீஜிங்: சீனாவின் 3வது விமானம் தாங்கி போர் கப்பலான புஜியான் இந்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஒரு நாட்டின் ராணுவ திறனை வௌிப்படுத்தும் முக்கிய சக்திகளில் ஒன்றாக விமானம் தாங்கி போர் கப்பல்கள் உள்ளன. அந்த வகையில் சீன ராணுவம் ஏற்கனவே இரண்டு விமானம் தாங்கி போர் கப்பல்களை கொண்டுள்ளது.
அதன்படி ரஷ்யாவிடம் இருந்து வாங்கி மறுவடிவமைக்கப்பட்ட லியோனிங் என்ற விமானம் தாங்கி போர் கப்பல் 2012ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. மேலும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஷான்டாங் என்ற விமானம் தாங்கி போர் கப்பலும் தற்போது செயல்பாட்டில் உள்ளது. 3வதாக மற்றொரு விமானம் தாங்கி போர் கப்பலான புஜியானை கடந்த 2012ம் ஆண்டு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்க தொடங்கியது.
இது கடந்த ஆண்டு மே மாதம் முதல் பல்வேறு கடல் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் புஜியான் விமானம் தாங்கி போர் கப்பல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புஜியான் விமானம் தாங்கி போர் கப்பல், அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற கப்பலை போன்று மின்காந்த விமான ஏவுதள அமைப்பு உள்பட பல்வேறு அதிநவீன வசதிகளை கொண்டது.
The post அதிநவீன வசதிகளை கொண்ட சீனாவின் புஜியான் விமானம் தாங்கி போர் கப்பல் சேவை இந்த ஆண்டு தொடக்கம் appeared first on Dinakaran.