அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் விவசாயிகள் எதிர்பார்ப்பு குட்கா பொருட்கள் பறிமுதல்

11 hours ago 1

ஈரோடு, மார்ச் 12: ஈரோடு மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தியிருக்கிறார். அதன் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள கடைகளில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள், போலீசார் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மொடக்குறிச்சி அருகேயுள்ள அய்யகவுண்டபாளையம் பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் போலீசார் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த மொடக்குறிச்சி போலீசார், கடை உரிமையாளர் செல்லம்மாள் (54) என்பவருக்கு அபராதம் விதித்தனர்.

The post அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் விவசாயிகள் எதிர்பார்ப்பு குட்கா பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article