அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் - வானிலை மையம்

4 weeks ago 7

சென்னை,

தமிழ்நாட்டில் இன்றும் (20-04-2025), நாளையும் (21-04-2025) அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

நாளை மறுநாள் (ஏப்.22ம் தேதி) முதல் 24ம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வானிலை ஆய்வகங்களில் இன்று (20.04.2025, மாலை 5:30 மணி) அதிகபட்ச வெப்பநிலை (°C) அளவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி

வேலூர் - 40.2 டிகிரி செல்சியஸ்

மதுரை விமான நிலையம் - 40.0 டிகிரி செல்சியஸ்

மதுரை நகரம் - 39.6 டிகிரி செல்சியஸ்

கரூர் - 39.5 டிகிரி செல்சியஸ்

ஈரோடு - 39.4 டிகிரி செல்சியஸ்

திருச்சி - 39.1 டிகிரி செல்சியஸ்

திருத்தணி - 38.9 டிகிரி செல்சியஸ்

ஈரோடு - 38.0 டிகிரி செல்சியஸ்

சென்னை விமான நிலையம் - 38.0 டிகிரி செல்சியஸ்

சென்னையின் உள் பகுதிகள் தொடர்ந்து வெப்பமாக உள்ளன. வேலூர் முதலிடத்தில் உள்ளது.

நாளை (21-04-2025) ஈரோடு, கரூர், மதுரை மற்றும் வேலூர் ஆகியவை வெப்பநிலையில் முதலிடத்திற்கு நெருக்கமாக இருக்கும்.

குறிப்பு: உள்நாட்டு உலர் வெப்பத்தையும், அதிக ஈரப்பதத்துடன் கூடிய கடலோர நிலைய வெப்பத்தையும் ஒப்பிட முடியாது, ஏனெனில் அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் உடலுக்கு உணரப்படும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article