சென்னை: மதுபானங்களை அதிக விலைக்கு விற்றால் அனைத்து பணியாளர்களும் இடைநீக்கம் செய்யப்படுவர் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், டாஸ்மாக் தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளரான மோகன்ராஜ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 18 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 24,986 ஊழியர்கள் இதுவரையிலும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. பெரிய அளவில் வருமானம் பார்த்து வரும் டாஸ்மாக் நிறுவனம் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு குறைவான ஊதியமே வழங்குகிறது.