ராமேஸ்வரம், டிச. 6: ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் வளைகுடா பகுதிகளில் அதிக குதிரை திறன் கொண்ட இயந்திரங்களை (சினோடிரக் மற்றும் வெச்சாயி) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை மீறி ராமேஸ்வரம் துறைமுகத்தில் அதிக குதிரை திறன் கொண்ட இயந்திரம் பொருத்தி அனுமதியின்றி மீன்பிடி தொழில் செய்து வருவது நேற்று மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
காலையில் கடலுக்குள் ரோந்து சென்ற மீன்வளத்துறை அமலாக்க பிரிவு, மரைன் போலீசார் படகுகளை சோதனை செய்தனர். இதில் பாம்பன் மீனவர் காலின்ஸ், தங்கச்சிமடம் மீனவர்கள் பிரபாகரன் மற்றும் அருள்ரிசப் ஆகியோரின் பதிவு இல்லாத மூன்று விசைப்படகுகள் என்பது உறுதி செய்யப்பட்டது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி தொழில் முடக்க ஆணை வழங்கி படகுகளை மீன்பிடிக்க இயக்க தடை விதித்தார்.
The post அதிக திறன் இன்ஜினை பயன்படுத்திய 3 விசைப்படகுகள் இயக்க தடை appeared first on Dinakaran.