அதிக சிக்சர்கள்...ரோகித் சர்மா புதிய சாதனை

4 hours ago 2

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 144 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடியது. 15.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 146 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது . அதிகபட்சமாக ரோகித் சர்மா( 8 பவுண்டரி,  3 சிக்சர் ) 70 ரன்கள் எடுத்தார்.


இந்த நிலையில், இந்த போட்டியில் 3 சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி மும்பை அணிக்காக அதிக சிக்சர்கள் (259) அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். பொல்லார்டு (258) சிக்சர்கள் 2வது இடத்தில் உள்ளார் . 

Read Entire Article