வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம் உலகின் பெரும் நிறுவனங்களில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, கடந்த சில ஆண்டுகளில், ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தது. கடந்த 2023ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கைகள் இந்திய கோடீஸ்வரரான அதானிக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பை ஏற்படுத்தின. ஹிண்டன்பர்க் சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளையும் அதானி மற்றும் அவரது நிறுவனங்கள் மறுத்தன.
இந்நிலையில், அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். இதுகுறித்து நேட் ஆண்டர்சன் வெளியிட்டுள்ள பதிவில், “ஹிண்டன்பர்க் நிறுவனத்தை மூடுவதற்கான காரணம் எதுவுமில்லை. மிரட்டல், உடல்நலப் பாதிப்புகள் போன்ற எதுவுமில்லை. கடந்த ஆண்டு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எங்கள் குழுவுடன் விவாதித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். இதனால், ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவுசெய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
The post அதானி விவகாரத்தில் புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் மூடல்: நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவிப்பு appeared first on Dinakaran.