ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், ராடுகானு 2வது சுற்றில் வெற்றி

3 hours ago 4

மெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த 2வது சுற்று போட்டியில், 2ம் நிலை வீராங்கனையான போலந்தின் 23 வயதான இகா ஸ்வியாடெக் 6-0, 6-2 என ஸ்லோவாக்கியாவின் ரெபேக்கா ஷ்ரம்கோவாவை வென்றார்.

8ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவரோ, 6-3, 3-6, 6-4 என சீனாவின் வாங் சியுவையும், இங்கிலாந்தின் எம்மா ராடுகானு 6-3, 7-5 என அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவையும், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் 7-5, 6-3 என கொலம்பியாவின் கமிலா ஒசோரியோவையும் வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

ரஷ்யாவின் டாரியா கசட்கினா, உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா, கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா ஆகியோரும் 2வது சுற்றில் வெற்றிபெற்றனர். ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில் செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிக், 6-4, 6-4, 6-2 எஎ போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்சை வென்றார்.

The post ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், ராடுகானு 2வது சுற்றில் வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article