வாஷிங்டன் : அதானி மீதான லஞ்ச புகாரால் இந்திய – அமெரிக்க இடையேயான உறவில் விரிசல் ஏற்படாது என்று வெள்ளை மாளிகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன்-பியரிடம் அதானி முறைகேடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தங்களுக்கு தெரியும் என்றும் அதானி குழுமத்திற்கு எதிரான அந்த குற்றச்சாட்டுகளின் அம்சங்கள் குறித்து பத்திரங்கள், பரிவர்த்தனை ஆணையம் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்றும் கூறினார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு வலுவான அடித்தளம் கொண்டது என்றும் அதானி விவகாரத்தால் இந்திய – அமெரிக்க இடையேயான உறவில் விரிசல் ஏற்படாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதானி முறைகேடு விவகாரத்தில் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மற்றும் நீதித்துறை நேரடியாக கவனிக்கும் என்றும் விளக்கம் அளித்தார். முன்னதாக சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற லஞ்சம் கொடுக்க முன்வந்த புகாரில் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனால் இரு நாட்டு உறவில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவிய நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையே வலுவான உறவு இருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
The post அதானி மீதான லஞ்ச புகாரால் இந்திய – அமெரிக்க இடையேயான உறவில் விரிசல் ஏற்படாது :வெள்ளை மாளிகை திட்டவட்டம் appeared first on Dinakaran.