நத்தம், பிப். 21:நத்தம் அருகேயுள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா. லட்சுமணனின் தம்பி சுரேஷ் (40). கடந்த பிப்.7ம் தேதி குடும்ப தகராறில் விளாம்பட்டியில் வீட்டிலிருந்த சங்கீதாவை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு சுரேஷ் டூவீலரில் தப்பியோடி விட்டார். இதுகுறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான சுரேஷை தேடி வந்தனர்.
விசாரணையில் மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகே வலையபட்டியில் உள்ள உறவினர் வீட்டில் சுரேஷ் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷை பிடிப்பதற்கு அங்கு சென்றனர். இதனையறிந்த சுரேஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர் போலீசார் சுரேஷிற்கு அடைக்கலம் கொடுத்த அவரது பெரியம்மா மகள் பரமேஸ்வரி (37), அவரது கணவர் சித்திரன் (39) ஆகியோரை கைது செய்தனர். மேலும் சுரேஷ் தப்பியோட பயன்படுத்திய டூவீலரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அண்ணி கொலை வழக்கில் தேடப்படும் வாலிபருக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதி கைது: நத்தம் போலீசார் அதிரடி appeared first on Dinakaran.