அண்ணாமலைக்கு வழங்கப்படும் அடுத்த பொறுப்பு என்ன?: கட்சியினர் எதிர்பார்ப்பு

1 week ago 1

தமிழக பா.ஜ.க. தலைவராக கடந்த 2021-ம் ஆண்டு முதல் இருந்து வந்த கே.அண்ணாமலை இன்று தனது பதவி காலத்தை நிறைவு செய்தார். அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விருப்ப மனு தாக்கல் செய்த ஒரே நபரான நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ.க.வின் 13-வது தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1980-ம் ஆண்டு முதல் இதுவரை 12 பேர் தமிழக பா.ஜ.க. தலைவர்களாக இருந்துள்ளனர்.

அவர்களை பற்றிய விவரம் வருமாறு:-

1. கே.நாராயண ராவ் (1980-1983)

2. கே.என்.லட்சுமணன் (1984-1989)

3. வி.விஜயராகவலு (1990-1993)

4. டாக்டர் என்.எஸ்.சந்திரபோஸ் (1993-1995)

5. கே.என்.லட்சுமணன் (1996-2000)

6. டாக்டர் எஸ்.பி.கிருபாநிதி (2000-2003)

7. சி.பி.ராதாகிருஷ்ணன் (2004-2007)

8. இல.கணேசன் (2007-2010)

9. பொன்.ராதாகிருஷ்ணன் (2010-2014)

10. டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (2014-2019)

11. எல்.முருகன் (2020-2021)

12 கே.அண்ணாமலை (2021-2025)

தமிழக பா.ஜ.க. தலைவர்களாக இருந்த 12 பேரில் சி.பி.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் கவர்னர்களாக இருந்து வருகின்றனர். டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக இருந்தார். பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரியாக இருந்தார். எல்.முருகன் மத்திய மந்திரியாக இருந்து வருகிறார். அந்த வகையில், கே.அண்ணாமலைக்கு எந்த பொறுப்பு வழங்கப்படும்? என்று கட்சியினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Read Entire Article