
சென்னை,
என் வீட்டை முற்றுகையிடுவேன் என்று கூறும் அண்ணாமலைக்கு, தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச்சொல்லுங்கள் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தார். இதனையடுத்து மும்மொழி கொள்கையில் தலைவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர். அண்ணாசாலைக்கு நான் தனியாக வருகிறேன். உதயநிதி ஸ்டாலின் தனியாக வரத்தயாரா? என்று அண்ணாமலை எதிர் சவால் விடுத்தார்.
இந்தநிலையில், காலை உணவு வழங்கும் "அன்னம் தரும் அமுதக்கரங்கள் திட்டம்" சென்னை, ஜி.கே.எம் காலனி 20 வது தெரு - ஜம்புலிங்கம் மெயின் ரோடு பகுதியில் தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கர்நாடகாவில் போலீசாக இருப்பது போன்ற நினைப்பில் அண்ணாமலை இருக்கிறார். அண்ணாமலை ஒன்றும் கர்நாடக போலீஸ் கிடையாது. அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தின் செங்கலையாவது தொட்டு பார்க்கட்டும் என்று கூறினார்.