அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் நியமன விவகாரம்: ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பதில்

4 weeks ago 6

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தேடுதல் குழு அமைத்து அரசு எடுத்த நடவடிக்கை மாநில அரசு பல்கலைக்கழக சட்டப்பிரிவுகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்று ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பதிலளித்துள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வுசெய்வதற்காக தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறவில்லை என்றும் இது யுஜிசி விதிமுறைகளுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் முராணனது என்று பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியிருந்தார். அதோடு யுஜிசி பிரதிநிதியுடன் கூடிய தேடுதல் குழுவை நியமித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். இந்நிலையில், ஆளுநரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Read Entire Article