
சென்னை,
தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை, நேற்று காலை விமானம் மூலம் திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.தேசிய தலைமையை அவர் சந்திக்க இருப்பதாக பரபரப்பு கிளம்பியது.
இந்த சூழலில், அவர் டெல்லி வழியே உத்தரகாண்ட் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு, கேதர்நாத் உள்பட ஆன்மிக தலங்களுக்கு அவர் சென்று வழிப்பாடு நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இமயமலை பாபா கோவிலும் அவர் வழிபாடு நடத்த இருப்பதாக சொல்லப்படுகிறது.