அண்ணா வழியில் அயராது உழைப்போம்! நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி

3 hours ago 1

சென்னை: அண்ணா வழியில் அயராது உழைப்போம்! நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம் என பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றார். அண்ணா நினைவு நாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி நடத்தினர். இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கம் வரை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த பேரணியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தநிலையில், தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியதை முதல்வர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

“எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.”

தந்தை பெரியாரின் புகழொளியையும் – அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்!

நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது!

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்! இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

 

The post அண்ணா வழியில் அயராது உழைப்போம்! நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி appeared first on Dinakaran.

Read Entire Article