அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்பு சூழலை மேம்படுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

3 weeks ago 4

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்பு சூழலை மேம்படுத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் கடந்த 25ம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது.

இதையடுத்து, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, எஃப்.ஐ.ஆர். நகலையோ இணையத்தளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாணவர்கள், மாணவிகள் இரு தரப்பினரிடமும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனித்தனியாக கலந்துரையாடினார். பல்கலை. வளாகத்தை பாதுகாப்பான இடமாக மாற்ற மாணவர்கள் கூறிய கருத்துகள், பரிந்துரைகளை ஆளுநர் கேட்டறிந்தார்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்பு சூழலை மேம்படுத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அண்ணா பல்கலை.யில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து அச்சமடைய வேண்டாம். மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனே நடவடிக்கை எடுக்க பல்கலை. நிர்வாகத்துக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். பல்கலை.யில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலனே பிரதானமானது என்று கூறினார்.

The post அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்பு சூழலை மேம்படுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article