சென்னை: அண்ணா பல்கலை. வளாகத்தில் நுழைவதற்கு QR கோடு மூலம் அனுமதிக்கும் நடைமுறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலை. வளாகத்துக்குள் வருவோரை கண்காணிக்கும் வகையில் புதிய நடைமுறையை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை. இணையதளம் மூலம் செயலி கொண்டு வரப்பட்டு அதன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலை.யில் யாரையும் பார்க்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட செயலி மூலம் முன் அனுமதி பெற வேண்டும். பார்வையாளர்களின் விவரம் நுழைவு வாயிலில் உள்ள பாதுகாப்பு அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
The post அண்ணா பல்கலை. வளாகத்தில் நுழைவதற்கு QR கோடு மூலம் அனுமதிக்கும் நடைமுறையை அமல்படுத்த திட்டம் appeared first on Dinakaran.