நாமக்கல், பிப்.4: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார்இளங்கோவன், நகர திமுக செயலாளர்கள் ராணாஆனந்த், பூபதி, சிவக்குமார், மேயர் கலாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால், கவுன்சிலர்கள் சரவணன், செல்வகுமார், நந்தினிதேவி, சார்பு அணி நிர்வாகிகள் ராஜவேல், உமாசங்கர், கடல் அரசன் கார்த்தி, நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய நிர்வாககுழு உறுப்பினர் பிரபு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.