அண்ணா சிலை மீது திமுக - பாஜக கொடி: தஞ்சாவூரில் பரபரப்பு

9 hours ago 2

தஞ்சாவூர் ,

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை உள்ளது. இந்த அண்ணா சிலை அருகே இன்று திமுக மகளிர் அணி கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அந்த பகுதி முழுவதும் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு உள்ளன.

இந்தசூழலில், அண்ணா சிலையின் கழுத்தில் திமுக மற்றும் பாஜகவின் கொடிகளை மர்ம நபர்கள் போர்த்திவிட்டு சென்றிருக்கின்றனர். இதனை இன்று காலை கண்ட கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்து அண்ணா சிலையின் கழுத்தில் கிடந்த திமுக - பாஜக கொடிகளை அகற்றினர்.

நள்ளிரவில் யாரோ மர்மநபர்கள் வந்து அண்ணா சிலை மீது திமுக - பாஜக கொடியை போர்த்தி சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Entire Article