
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில்,
பாகிஸ்தானின் பகவல்பூர், முரிட்கே பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக செயல்படுகின்றன. வான் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி டிரோன்களை ஏவ முடியாத நிலைமை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. பயங்கரவாத செயல்களின் மூளையாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உள்ளனர். பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பாகிஸ்தான், அதற்கு மாறாக இந்தியா மீது தாக்குதல் தொடுத்தது.
நாம் நடத்திய ஒரே தாக்குதலில் பயங்கரவாதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அழிக்கப்பட்டுள்ளனர். பகல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நமது படையினர் தக்க நடவடிக்கை எடுத்தனர். நவயுகபோர் முறைகளில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை எடுத்துக்காட்டி உள்ளோம். அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்றார்.