அணு ஆயுத ஏவுகணை ஏவி அமெரிக்கா சோதனை

4 hours ago 1

வாஷிங்டன்,

அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அமெரிக்கா சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணை ஏவி சோதனை மேற்கொண்டு உள்ளது. அணு சக்தி திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன் 111 என்ற ஏவுகணையை அமெரிக்கா ஏவியது. கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி படை தளத்தில் இருந்து மார்ஷல் தீவுக்கு இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது.

மணிக்கு 15 ஆயிரம் மைல் வேகத்தில் சென்ற இந்த ஏவுகணை 4,200 மைல் தூரத்துக்கு சோதனை சென்றது. இந்த ஏவுகணை சோதனை வழக்கமானதுதான் என்றும், தற்போதைய உலக நிகழ்வுகளுக்கு எதிர்வினை அல்ல என்றும், அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

Read Entire Article