அணியில் எடுக்காததால் அவர் 3 மாதங்கள் என்னிடம் பேசவில்லை - கங்குலி பகிர்ந்த தகவல்

2 weeks ago 2

மும்பை,

2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் கங்குலி தலைமையில் விளையாடிய இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முன்னதாக இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அந்த கால கட்டத்தில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விவிஎஸ் லட்சுமணனை கங்குலி தேர்ந்தெடுக்காதது பல விமர்சனங்களை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக தினேஷ் மோங்கியா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் அந்த தொடரில் லட்சுமணனை தேர்வு செய்யாததால் அவர் தன்னிடம் 3 மாதங்கள் பேசவில்லை என்ற தகவலை கங்குலி சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "அந்த முடிவுக்கு (அணியில் தேர்வு செய்யாததற்கு) லட்சுமணன் மகிழ்ச்சியற்றவராகவும் வருத்தமாகவும் இருந்தார். மேலும் அவர் என்னுடன் 3 மாதங்கள் பேசவில்லை. நாங்கள் வீரர்களுக்கு ஓய்வு அளித்தபோது இது பல முறை நடந்துள்ளது. அவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தனர்.

உலகக்கோப்பையில் லட்சுமண் இடம் பெறவில்லை. அதனால் அவர் மூன்று மாதங்கள் என்னிடம் பேசவே இல்லை. பின்னர் நான் அவருடன் சமரசம் செய்தேன். லட்சுமணன் போன்ற திறமையான வீரர் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறாமல் போனதற்கு வருத்தப்படுவது மிகவும் இயல்பானது. நாங்கள் உலகக்கோப்பையை முடித்த பிறகு அணி சிறப்பாக செயல்பட்டதில் அவர் மகிழ்ச்சியடைந்தார்" என்று கூறினார்.

Read Entire Article