அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கம் ஏன்..? - விளக்கம் அளித்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்

3 months ago 21

முல்தான்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி முல்தானில் நாளை தொடங்குகிறது. இதையடுத்து இந்த போட்டிக்கான விளையாடும் வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவித்தது.

இந்த அணியில் இருந்து முன்னணி வீரர்களான பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக நோமன் அலி, சஜித் கான், ஜாஹித் மஹ்மூத், கம்ரான் குலாம் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் இடம்பெறாதது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த அணியின் துணை பயிற்சியாளர் அசார் மக்முத் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "பாபர் அசாம் விளையாட தயாராக இருந்தார், ஆனால் அவருக்கு ஓய்வு கொடுக்க இதுவே சிறந்த நேரம் என்று தேர்வுக் குழு நினைத்தது, பாபர் அசாம் அணியில் இருந்து நீக்கப்படவில்லை. அவர் ஓய்வில் உள்ளார். அவர் எங்களின் நம்பர் 1 வீரர். அவரது நுட்பம் மற்றும் திறன் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் எங்களுக்கு இல்லை" என்று அசார் மக்முத் கூறினார்.

Read Entire Article