அட்லீயைபோல சாதனை படைப்பாரா லோகேஷ்?

6 months ago 19

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து, கைதி 2 பட பணியில் லோகேஷ் ஈடுபட உள்ளார். இப்படங்களையடுத்து லோகேஷ் ஒரு பான் இந்திய திரைப்படத்தை இயக்கப்போவதாகவும் அதில் நடிகர் அமீர்கான் கதாநாயகனாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இப்படம் உலகளவில் ரூ. 1,165 கோடியும், இந்தியில் ரூ. 585 கோடியும் வசூலித்து சாதனை படைத்தது.

லோகேஷ்-அமீர்கான் கூட்டணி குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல் உண்மையாகும் பட்சத்தில் அட்லீயைபோல, லோகேஷும் அந்த சாதனையை படைப்பாரா என்று பார்க்க வேண்டும். லோகேஷ் இதுவரை இயக்கிய அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றநிலையில், லோகேஷ்-அமீர்கான் இணையும் பட்சத்தில் இப்படமும் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.


Read Entire Article