அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமில்லை

2 hours ago 1

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8980க்கும் சவரன் ரூ.71840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நகை கடைகளில் அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் அதே நேரத்தில் தினம், தினம் புதிய உச்சத்தை பதிவு செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த 22ம் தேதி தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அன்றைய தினம் ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290க்கும், பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது.

24ம் தேதி பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.72,040க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 27ம் தேதி வரை தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940க்கும், பவுனுக்கு ரூ.520 குறைந்து, ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 520க்கும் விற்பனையானது. இந்த விலை குறைவு என்பது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,980க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.71,840க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இன்று அட்சதிரிதியை கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்ந்தது நகை வாங்குவோருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமில்லை appeared first on Dinakaran.

Read Entire Article