அடையாறு பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது: 6 கிராம் ஹெராயின் பறிமுதல்

2 months ago 14

சென்னை: அடையாறு பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு 6 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல், J-2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படை காவல் குழுவினர் நேற்று (11.12.2024) காலை, அடையாறு காந்தி நகர் பேருந்து டிப்போ பின்புறமுள்ள 1வது மெயின் ரோட்டில் கண்காணித்து, அங்கு ஹெராயின் என்ற போதைப்பொருள் வைத்திருந்த அனருல் இஸ்லாம், வ/32, த/பெ.நூருல் இஸ்லாம், NIZ DHIND, நாகோன், அஸ்ஸாம் மாநிலம் என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 65 பிளாஸ்டிக் குப்பிகளில் மொத்தம் 6 கிராம் எடை கொண்ட ஹெராயின் என்ற போதைப்பொருள் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி அனருல் இஸ்லாம், விசாரணைக்குப் பின்னர் நேற்று (11.12.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

The post அடையாறு பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது: 6 கிராம் ஹெராயின் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article