நாகப்பட்டினம்,அக்.9: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பதை வலியுறுத்தி இரண்டு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் முருகேசன் பேரணியை தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் கடை வீதி, வேளாங்கண்ணி, வேட்டைகாரனியிருப்பு வழியாக வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் பேரணி நிறைவடைந்தது. பேரணியில் 90 மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களை சேர்ந்தோர் பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பாக இரண்டு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். முன்னதாக பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற உறுதிமொழியை கலெக்டர் அலுவலக வளாகத்தில் எடுத்துக்கொண்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், மாவட்ட சமூகநல அலுவலர் திவ்யபிரபா, மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அடைந்துள்ளனர் நாகப்பட்டினத்தில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.