பாடாலூர், ஜன.18: கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அங்கமான பச்சைமலை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி “மரமே மாற்றம்” அறக்கட்டளை, பெரம்பலூர் தனியார் அமைப்பு மற்றும் புதிய பயணம் அமைப்புகள் சார்பாக மினி மாரத்தான் ஓட்ட போட்டி அடைக்கம்பட்டியில் நடைபெற்றது. சர்வதேச பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரரான மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அப்பகுதி இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஓட்டப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கியும் சிறப்பித்தார். இந்நிகழ்வில், பெரம்பலூர் மாவட்டத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் பச்சைமலைத்தொடர் குறித்தான தகவல்களும், அவற்றைப் பேணிப் பாதுகாப்பதின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ்கள், மரக்கன்றுகள், துணிப்பைகள் ஆகியவை வழங்கப்பட்டது.
The post அடைக்கம்பட்டியில் பச்சைமலை குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் appeared first on Dinakaran.