அடுத்தவர் மனைவிக்கு முத்தம்: பாஜ நிர்வாகிக்கு போலீஸ் வலை

2 hours ago 1

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பத்துகாணி குமாரபவன் பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் என்ற அனிகுட்டன் (48). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி தன்னியா (40). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளனர். தன்னியா பத்துகாணி சந்திப்பு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று அனில்குமார் மனைவியின் கடைக்கு சென்றுள்ளார். அப்போது பத்துகாணி நிஜாபவன் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் மதுகுமார் (52) என்பவர் தன்னியாவுக்கு முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அனிகுட்டன், மனைவியைக் கண்டித்ததோடு, பாஜ பிரமுகரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதுகுமார், அனில் குமாரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிவிட்டார். இது குறித்து அனில்குமார் ஆறுகாணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான மதுகுமாரை தேடி வருகின்றனர். தலைமறைவான பா.ஜ. பிரமுகர் மதுகுமார் ஆறுகாணி கிளை செயலாளராகவும், கடையாலுமூடு பேரூராட்சி 9வது வார்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

The post அடுத்தவர் மனைவிக்கு முத்தம்: பாஜ நிர்வாகிக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Read Entire Article