அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ந்த ஆப்கானிஸ்தான்

2 months ago 10

காபுல்,

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. இது அதிகாலை 4.20 மணியளவில் 100 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது. இது அதிகாலை 4.33 மணிக்கு 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.

அடுத்தடுத்து அரைமணி நேரத்திற்குள் ஏற்பட்ட இந்த இரண்டு நிலநடுக்கங்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Read Entire Article