அடுத்த ரேஸுக்கு தயாரான அஜித்

2 weeks ago 5

துபாய்,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் (Dubai 24H Race) பங்கேற்றார். இந்த தொடரில் அஜித்தின் அணி, போர்ஸ்சே 992 பிரிவில் 3வது இடத்தை பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அஜித் ஓட்டுனராக களமிறங்கி வாகனம் ஓட்டிய போர்ஸ்சே ஜிடி4 பிரிவில் வெற்றி பெறவில்லை என்றாலும், அவரது அணிக்கு 'ஸ்பிரிட் ஆப் தி கேம்' விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், அஜித் அடுத்த ரேஸுக்கு தயாராகி இருக்கிறார். அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் தெற்கு ஐரோப்பிய தொடர் 2025 கார் ரேஸ் போர்ச்சுக்கலில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள நடிகர் அஜித் தற்போது போர்ச்சுக்கல் சென்றுள்ளார்.

அடுத்த ரேஸுக்கு தயாரான AK Southern European series 2025 கார் ரேஸில் பங்கேற்க போர்ச்சுக்கல் சென்ற நடிகர் அஜித்ஜன.18, 19 ஆகிய நாட்களில் போட்டி நடைபெறவுள்ளது#AjithKumarRacing #ThanthiTV #ajith #AKRacing pic.twitter.com/XL7E87gHjm

— Thanthi TV (@ThanthiTV) January 17, 2025
Read Entire Article