சென்னை,
முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு டி.டி.வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஒரு ஏ.டி.ஜி.பி.யே புகார் கொடுக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கின் நிலை இருப்பதாக விமர்சித்தார்.
மேலும், தி.மு.க.வை வீழ்த்த அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், கட்சிகளின் தலைவர்கள் முதல்-அமைச்சர் பதவி முக்கியமா? அல்லது தி.மு.க.வை வீழ்த்துவது முக்கியமா? என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.