திருப்பதி,
திருப்பதி ஏழுலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமியை முன்னிட்டு சின்னசேஷ வாகனம் மற்றும் கருட வாகனங்களில் மலையப்ப சுவாமியின் வீதி உலா நடைபெற்றது. அப்போது நான்கு மாட வீதிகளில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்தனர்.