அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார் - ஜோ பைடன்

2 months ago 12

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் (வயது 78) அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார். அதற்கான வேலைப்பாடுகள் வெள்ளை மாளிகையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்பிற்கு தொலைபேசி வாயிலாக ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்திக்குமாறும் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து, ஜோ பைடன் நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். ஜோ பைடன் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். நாட்டை ஒன்றிணைக்க உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜோ பைடன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,

இன்று அமெரிக்கா பார்க்கும் ஒரு சிறந்த நிர்வாகி கமலா ஹாரிஸ். அவரிடம் நேர்மையும், தைரியமும் உள்ளது. அசாதரண சூழ்நிலையிலும் அவர் ஒரு வரலாற்று பிரசாரத்தை முன்னெடுத்தார். தொடர்ந்து மக்களுக்காக போராடுவார். 2020ல் நான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட போது, கமலாவை துணை ஜனாதிபதியாக, தேர்ந்தெடுத்தது தான் நான் எடுத்த முதல் முடிவு. இதுவே எனது சிறந்த முடிவு ஆகும்.

கமலா ஹாரிஸ் தொடர்ந்து உரிய நோக்கத்துடனும், உறுதியுடனும், மகிழ்ச்சியுடனும் அரசை எதிர்த்து குரல்கொடுப்பார். அனைத்து அமெரிக்க மக்களுக்கும் ஒரு சிறந்த சாம்பியன் ஷிப்பாக இருப்பார். எல்லாவற்றிக்கும் மேலாக அமெரிக்காவின் எதிர்காலத்தில் முத்திரை பதிக்கும்போது அடுத்த தலைமுறையினர் எதிர்பாக்கும் ஒரு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார் என்று அதில் பதிவிட்டுள்ளார்.

President Biden tweets, "What America saw today was the Kamala Harris I know and deeply admire. She's been a tremendous partner and public servant full of integrity, courage, and character. Under extraordinary circumstances, she stepped up and led a historic campaign that… pic.twitter.com/FRFhHekAW2

— ANI (@ANI) November 7, 2024
Read Entire Article