அடுத்த தலைமுறை பேச்சாளர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

3 months ago 9

சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது:கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட “என் உயிரினும் மேலான” பேச்சுப்போட்டியின் மூலம் 183 இளம் பேச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் உட்பட 200 இளம் பேச்சாளர்களை, திராவிட இயக்கத்தின் அடுத்தத் தலைமுறை பேச்சாளர்களாக உருவாக்கும் முயற்சியில் நடத்தப்படும் 2 நாள் பயிற்சி முகாமினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயம்-கலைஞர் அரங்கில் தொடங்கி வைத்தோம்.

இந்த முகாமில் பேச்சுக்கலை குறித்து நம் இளம்பேச்சாளர்களுக்கு திராவிட இயக்க பேச்சாளர்கள்- திமுக முன்னணியினர் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமை முறையாக பயன்படுத்திக் கொண்டு, எட்டுத்திக்கும் கொள்கை முரசொலிக்க நம் இளம் பேச்சாளர்களை வாழ்த்தினோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post அடுத்த தலைமுறை பேச்சாளர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article