அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்காது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
கும்பகோணத்தில் உள்ள ஒப்பிலிப்பன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள இந்து கோயில் சொத்துகள் மற்றும் ஏழை மக்களின் நிலங்களை அபகரிக்கும் சட்டமாக வக்பு வாரிய சட்டம் இருக்கிறது. 1996-ம் ஆண்டு வக்பு வாரிய சட்டத் திருத்தத்துக்கு முன்பு, வக்பு வாரியத்துக்கு 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. தற்போது அது 12.40 லட்சம் ஏக்கராக மாறியுள்ளது. லட்சக்கணக்கான கோடி மதிப்பிலான வக்பு சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்டு முஸ்லிம் சமுதாயத்திடம் ஒப்படைப்போம். வக்பு சொத்துகள் என்றால், உங்களுக்காக நானே போராடுவேன்.