அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் குடிபோதையில் நிர்வாண போஸ்: மன்னிப்பு கேட்ட நடிகர் விநாயகன்

2 hours ago 1

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விநாயகன். நகைச்சுவை, வில்லன், நாயகன் வேடங்களில் நடித்துள்ளார். கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளில் சிக்குவது நடிகர் விநாயகனின் வழக்கமாகும். இதற்கிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் இறுதி ஊர்வலம் நடந்தபோது அவரை குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்தததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சமீபத்தில் ஐதராபாத் விமான நிலையத்தில் விமானநிலைய ஊழியர்களிடம் குடிபோதையில் தகராறு செய்தார். கோவாவில் ஒரு டீக்கடைக்காரரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சி கலூரில் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்றபடி பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களை ஆபாசமாக திட்டினார். மேலும் தான் அணிந்திருந்த வேட்டியை அவிழ்த்து ஆபாச போஸ் கொடுத்தார். இதை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். நடிகர் விநாயகனின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் செய்யாததால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் நடிகர் விநாயகன் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவில், ‘நான் நடிகன் என்ற முறையிலும், ஒரு மனிதன் என்ற முறையிலும் சில சமயங்களில் வரம்பு மீறி நடந்து கொண்டுள்ளேன். சில சமயங்களில் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னுடைய தவறுக்கும், நெகட்டிவ் எனர்ஜிக்கும் நான் பொது சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

The post அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் குடிபோதையில் நிர்வாண போஸ்: மன்னிப்பு கேட்ட நடிகர் விநாயகன் appeared first on Dinakaran.

Read Entire Article