தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பெரிய தாழையில் மீனவர்கள் விரித்த வலையில் 1 டன் எடை கொண்ட கொம்பு திருக்கை மீன் சிக்கியது. சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை மீனவ கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் ஜோசப் என்பவரது பைபர் படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் கடலில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டி ருந்த போது, திடீரென ராட்சத கொம்பு திருக்கை மீன் ஒன்று வலையில் சிக்கியது. வலை யுடன் பைபர் படகில் கயிறு கட்டி அந்த மீனை கரைக்கு கொண்டு வந்தனர்.