அஞ்சல் தினம் கொண்டாட்டம்

3 months ago 21

சாயல்குடி, அக்.10: கடலாடி ஒன்றியம், நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் \”உலக அஞ்சல் தினம்\” கொண்டாடப்பட்டது. இன்றைய நவீன வளர்ச்சியால் கடிதங்கள் எழுதுவது முற்றிலும் குறைந்து போனதால், மாணவர்களுக்கு கடிதம் எழுதும் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் கடிதம் எழுதும் பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்கள் அஞ்சல் அட்டையில் தங்கள் உறவினர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை எழுதினர். அந்த அஞ்சல் அட்டைகள் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் சேர்க்கப்பட்டது. கடிதம் எழுதும் பயிற்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞானவள்ளுவன் மாணவர்களுக்கு வழங்கினார்.

The post அஞ்சல் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article