அஞ்சலகங்களில் ஆதார் சேவை

2 weeks ago 3

நெல்லை, ஜன. 26: நெல்லை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முருகன் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான புதிய ஆதார் சேர்க்கை மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நெல்லை அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, பாளை, அம்பை. தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களில் நடக்கிறது. இந்த முகாமை பொதுமக்கள் டோக்கன் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். பாளை., நெல்லை தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் செயல்படுகிறது.

பொதுமக்களின் ஆதார் சேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெருகி வரும் ஆதார் தேவை, பள்ளி செல்லும் குழந்தைகள், பணிக்கு செல்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post அஞ்சலகங்களில் ஆதார் சேவை appeared first on Dinakaran.

Read Entire Article