அஜித்தின் "குட் பேட் அக்லி" 2வது பாடல் அப்டேட்!

2 days ago 3

சென்னை,

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாக இன்னும் 24 நாள்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீசர், இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை படைத்தது. இப்படத்தின் 'ஓஜி சம்பவம்' பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளனர்.

இந்த படத்தின் 2வது பாடல் தயாராகி விட்டதாகவும் அடுத்த வாரம் இப்பாடல் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இப்பாடலானது ஜெயில் பாடல் என்றும் இந்த பாடல் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளதாகவும் தகவல் வெளியானது. படத்தின் பின்னணி இசை முடிவடைந்துள்ளதாக ஜி.வி பிரகாஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

Second single with a lot of exciting names and combos on board

— G.V.Prakash Kumar (@gvprakash) March 29, 2025

இந்நிலையில் 'குட் பேட் அக்லி' படத்தின் 2வது பாடல் புரோமோ இன்று மாலை 5.50 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Maamey! God Bless You, for all the love ✨ #GoodBadUgly Second Single announcement with promo today at 5.50 PM.Indha paatakku speakers blast dhaan Keep guessing the singer, maamey #GoodBadUgly Grand release on 10th April, 2025 with VERA LEVEL entertainment

— Mythri Movie Makers (@MythriOfficial) March 29, 2025
Read Entire Article