அச்சமின்றி அடியெடுத்து வையுங்கள்!

3 weeks ago 4

நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் யார்? என்று கேட்டால் அனைவராலும் சொல்லமுடியும் “நீல் ஆம்ஸ்ட்ராங்’’. ஆனால், முதலில் காலடி வைத்திருக்க வேண்டியவர் யாரென்று பலருக்கும் தெரியாது. அவர்தான் “எட்வின் சி ஆல்ட்ரின்’’. அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிய அனுபவமிக்க பயிற்சி பெற்ற இவரை விண்வெளிக்குச் சென்ற அப்போலோ விண்கலத்தின் பைலட்டாக நியமித்தது அமெரிக்காவின் நாசா. நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் பணியாற்றியவர்.  மிகவும் தைரியசாலி என்பதால் நிலவுக்கு கோ – பைலட்டாக அனுப்பி வைக்கப்பட்டார். அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து கட்டளை வந்தது ‘‘பைலட் ஃபர்ஸ்ட்’’ கட்டளையை கேட்டதும் ஆல்ட்ரினுக்கு காலை எடுத்து வைக்க மனமில்லை.

புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் முதலில் கால் எடுத்துவைக்கிறோம். ஒருவேளை புதைமணலாக இருக்கலாம் அல்லது எரிமணலாக காலை சுடலாம் என பல எண்ணங்கள் அவருக்குள் ஓடியது. தயக்கமும் பயமும் அவரை கால்வைக்க விடவில்லை. அதற்குள் நாசாவிலிருந்து அடுத்த கட்டளை வந்தது ‘கோ பைலட் நெக்ஸ்ட்’ சற்றும் தயக்கமில்லாமல் ஆம்ஸ்டிராங் கால் பதித்ததும், முக்கியத்துவம் வாய்ந்த அந்த வரலாற்று நிகழ்வு நடந்து, அழிக்க முடியாத பக்கத்தில் எழுதப்பட்டது. இந்த உலகம் இரண்டாவது வருபவரை நினைவுகொள்வதில்லை. அந்த மனோபாவம் சரியா தவறா என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பயம், வெட்கம், தயக்கம் ‘‘நம் வெற்றிக்கு எதிரி’’ எனும் பாடம் ஆல்ட்ரினுக்கு மட்டுமல்ல நமக்கும்தான்.

இறைமக்களே, எனக்கு என்ன ஆகுமோ, ஏது நடக்குமோவென்ற பயமும் பதற்றமும் நிலவில் முதன்மை பைலட்டை பின்னுக்குத் தள்ளியது. இன்னும் சில தினங்களில் புதியதொரு ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்க உள்ளோம். புதிய ஆண்டு எப்படியிருக்குமோ? என்ன நடக்குமோ என்ற பயமும் பதற்றமும் கொள்ளாதிருங்கள். பயமும் தயக்கமும் என்றுமே நமது வெற்றிப் பாதைக்கு தடைகள்தான். இந்த ஆண்டு வரை உங்களை அதிசயமாக நடத்தி வந்த தேவன், உலகத்தின் முடிவு பரியந்தம் நம்மை நடத்த வல்லவராக இருக்கிறார். நன்றியுடனும், தூய்மை மனதுடனும் இயேசுவை நோக்குங்கள். அவரது கால்தடத்தை பின்பற்றுவோருக்கு எத்தகைய சூழலும் சாதகமாக மட்டுமல்ல, சாதனையாகவும் மாறும் என்பதில் சந்தேகமில்லை.
– அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்.

The post அச்சமின்றி அடியெடுத்து வையுங்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article