அசாம் காவல்துறை தலைவர் சிஆர்பிஎப் தலைமை இயக்குநராக ஞானேந்திர பிரதாப் சிங் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு

2 weeks ago 3

புதுடெல்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குநராக ஞானேந்திர பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி விதுல் குமார் கடந்த 2024 டிசம்பர் 31 முதல் தற்காலிகமாக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் அசாம் காவல்துறை தலைவர் ஞானேந்திர பிரதாப் சிங்கை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குநராக நியமித்து ஒன்றிய பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 1991ம் ஆண்டு மேகாலாயா பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஞானேந்திர பிரதாப் சிங், 2027ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி ஓய்வு பெறும் நாள் வரை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குராக பதவி வகிக்க ஒன்றிய அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

The post அசாம் காவல்துறை தலைவர் சிஆர்பிஎப் தலைமை இயக்குநராக ஞானேந்திர பிரதாப் சிங் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article